- பொது

நத்திங் ஃபோனின் புதிய பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நியமனம்!

நத்திங் ஃபோனின் புதிய பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் நியமினம்

• இனி நத்திங் ஃபோனின் டிஜிட்டல், பிரிண்ட் மற்றும் டிவிசி விளம்பரங்களில் அவரைப் பார்க்கலாம்

சென்னை – லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டான நத்திங் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங்குடன் சமீபத்தில் கூட்டு சேர்ந்துள்ளதை அறிவித்துள்ளது. இனி அவர் நத்திங் ஸ்மார்ட்போன்களின் அடையாளமாக இருப்பார். மேலும் பிராண்டு பற்றி இனி வரவிருக்கின்ற விளம்பரங்களில் நீங்கள் அவரைப் பார்க்கலாம். நத்திங் ஃபோன்கள் சம்பந்தமாக வரும் டிஜிட்டல், பிரிண்ட் மற்றும் டிவிசி விளம்பங்களில் நடிகர் இடம்பெறுவார்.

நத்திங் ஃபோனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறித்து ரன்வீர் சிங் கூறியதாவது, “அவர்களுடன் கூட்டிணைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிராண்டின் அழகையும் நம்புவதற்கரிய அதன் அருமையான வடிவமைப்பையும் நான் பார்த்த அந்த கணத்திலிருந்து, இந்த கூட்டாண்மை சரியானதுதான் என்று நான் அறிந்தேன். ஸ்மார்ட்போன் துறையிலிருந்து ஒழுங்கீனத்தை தகர்த்தெறிவதில் நத்திங் உறுதியாக இருப்பது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. நத்திங் உடன் கூட்டுசேர்ந்து, நிச்சயமாகவே பாராட்டுக்குரிய ஒன்றை உருவாக்குவதற்கு நான் இனியும் காத்திருக்க முடியாது.”

“நாங்கள் நத்திங் பிராண்டை அறிமுகப்படுத்தியதிலிருந்து, இந்தியாவில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய சந்தைக்கான எங்கள் இலக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன, மேலும் இந்தியாவில் தயாரிப்பு ஆலையை நிறுவிய பிறகு, நாடு முழுவதும் ஏராளமான சேவை மையங்களைத் திறந்துவருகிறோம், இந்த நேரத்தில் ரன்வீர் சுங்குடனான இந்த கூட்டாண்மை எங்கள் பிராண்டை மேலும் வளர்ப்பதற்கான இயல்பான அடுத்தகட்ட நடவடிக்கையாகும். எங்களுடன் இணைவதற்கு ரன்வீர்சிங்கை அலுவல் ரீதியாக வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நாங்கள் இப்போது சில காலமாக இணைப்பில் இருக்கிறோம், மேலும் அவர் ஒரு சாதனையாளர், படைப்புத்திறன் மிக்கவர், ஒரு பிராண்டாக நாங்கள் இந்த பண்புகளை எங்கள் பிராண்டோடு தொடர்புபடுத்தி பார்க்கிறோம். நாங்கள் ஒன்றாகசேர்ந்து பிராமாண்டத்தை உருவாக்குவதற்கு இனியும் காத்திருக்க முடியாது!” என நத்திங் இணை நிறுவனர், அகிஸ் எவாஞ்சலிடிஸ் தெரிவித்தார்.

நத்திங் அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனான ஃபோன் (2a)-ஐ மார்ச் 5 ஆம் தேதி சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதாக சமீபத்தில், உறுதிப்படுத்தியது, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுசேருகின்ற ஒரு பிரமாண்ட சந்திப்பில் இந்த அறிமுக விழா நடைபெறும், மேலும் இந்நிகழ்சி இந்தியாவின் தலைநகரான டெல்லியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும். ஃபோன் (2a) தினசரி ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, முக்கிய பயனர் தேவைகளை இருமடங்காக்குகிறது, நத்திங் பிராண்டின் வடிவமைப்பு புதுமை, சிறப்புத்திறன் மற்றும் வேலைப்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்த ஃபோன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபோன் (2a) ஃபோன் (2) இன் அருமையான சில அம்சங்கள் ஃபோன் (2a) இல் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஃபோன் (1) ஐ காட்டிலும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் செய்யும்.

படங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்: இணைப்பு

நத்திங் பற்றி
இந்த பிராண்ட் 2020 இல் நிறுவப்பட்டது, தொழில்நுட்பத்தை மீண்டும் மகிழ்ச்சியானதாக மாற்றுவதற்காக நத்திங் இங்கே உள்ளது. இது முதன் முதலில் வெளியிட்ட ஃபோன் (1) ஸ்மார்ட்போன் டைம் பத்திரிகையின் கெளரவமான “2022 இன் சிறந்த கண்டுபிடிப்புகள்” விருதை வென்றது. அதிநவீன வடிவமைப்பு மற்றும் பயனர் இணைப்பு ஆகிய அம்சங்களின் மூலம், லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நத்திங் நிறுவனம் இளம் தலைமுறையினர் மற்றும் படைப்புத்திறன் கொண்டவர்களுக்கு ஒரு மாற்று தொழில்நுட்ப தயாரிப்புகளை தயாரித்து வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் ஃபோன் (2) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, அதன் சமூகம், ஊடகங்கள் மற்றும் வடிவமைப்பு ஆர்வலர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றது, மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்தது

இன்றைய தேதி வரை, நத்திங் மூன்று ஆடியோ புராடக்ட்டுகள், இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2023 தேதிப்படி, நத்திங் வழங்கும் CMF என்ற ஒரு சப்-பிராண்டை நத்திங் வெளியிட்டுள்ளது:. அனைத்து நத்திங் புராடக்ட்டுகளும் 8,000 க்கும் மேற்பட்ட தனியார் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய அவர்களின் சமூகத்துடன் நெருக்கமான கூட்டணியுடன் தயாரிக்கப்படுகின்றன, மேலும் இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் நீண்டகாலம் உழைப்பதற்கு முதலிடம் கொடுக்கப்பட்டு அதற்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளன.

ஏதேனும் தகவலுக்கு, அணுகவும்:
நிதின் யாதவ்: [email protected]
ஆயுஷ் கௌதம்: [email protected]

About expressuser

Read All Posts By expressuser