
காசாகிராண்டின் தனித்துவம் மிக்க குழந்தைகளுக்கு உகந்த சிறப்பம்சங்களுடன், காசாகிராண்டு ராயல் அறிமுகம்
- வயது வந்தவர்களுக்கு ஒரு பகட்டான வாழ்வியலையும், பிள்ளைகளுக்கு வசீகரமான ஒரு உலகையும் கொடுப்பதை முன்னிட்டு சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட சமுதாயம்
- ஒரு சதுரஅடி ரூ.4399 என்ற விலையிலிருந்து, 1054 சதுர அடியிலிருந்து 2062 சதுர அடி வரை தாராளமான இடவசதியுடன் கூடிய 2BHK, 3BHK & 4BHK அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
- அனைத்து முக்கிய இடங்களுக்கும் பல கம்பெனிகளுக்கும், கல்வி நிலையங்களும் மற்றும் உத்தேசிக்கப்பட்டுள்ள வரவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் அணுகுவசதி உள்ள, மாநகரின் ஹாட்ஸ்பாட் ஆன சோழிங்கநல்லூரில் அமைந்திருக்கிறது.
தென்னிந்தியாவின் முன்னணி பில்டர்களில் ஒன்றாக காசாகிராண்டு, வயது வந்தவர்களுக்கு ஒரு பகட்டான வாழ்வியலையும் மற்றும் பிள்ளைகளுக்கு வசீகரமான ஒரு உலகையும் கொடுக்கும் நோக்கமுள்ள காசாகிராண்டு ராயல் என்ற தனித்துவமிக்க, சிறப்பம்சங்களுடன் கூடிய சமுதாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சோழிங்கநல்லூரில் 7.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் 2BHK, 3BHK & 4BHK என மொத்தம் 507 நவீன அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருக்கும் இந்தச் சமுதாய திட்டத்தில் அனைவருக்கும் ஒரு முழு வாழ்க்கையை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் மேல்கூரை, நீச்சல்குளம், சோர்வு தணிப்பதற்குரிய நீர்வீழ்ச்சி, ஒரு திறந்தவெளி திரையரங்கு, ஒரு உடற்பயிற்சிக்கூடம், ஓய்வு இருக்கையுடன் கூடிய பெர்கோலா கட்டமைப்பு, உடற்பயிற்சி பகுதி, ரிஃப்லத்சாலஜி பாத்வே, ஜாகிங் டிராக்குகள், கிரிக்கெட் பிட்ச், தோட்டப்பகுதி மற்றும் இன்னும் பல, ஆகமொத்தம் 54 சிறந்த வசதிகள் உள்ளன.
OMR – ன் முதல் குழந்தைகளுக்குத் தேவையான திட்டமான காசாகிராண்டு ராயலில் சாக்போர்ட் சுவர், டாட்லாட், பால்பூல், 3டி திரையரங்கு, வீடியோ விளையாட்டு அறை, காமிக் கார்னர், குழந்தைகளின் வர்ச்சுவல் கேம்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் போன்ற அதிகபட்ச வசதிகள் அடங்கியுள்ளன. இந்த அடுக்குமாடி வளாகத்தில் குழந்தைகளின் ஜங்குள் ஜிம், ஒரு ஃபுட்சல் கிரவுண்டு, குழந்தைகள் நீர்வீழ்ச்சி, வாட்டர்ஜெட், குழந்தைகள் நீச்சல்குளம், பாறை ஏறும் சுவர், ஸ்கேட்டிங் வளையம், விளையாடும் புல்வெளி மற்றும் இதர வெளிப்புற விளையாட்டுகளும் உள்ளன.
வடிவமைப்பு கட்டத்திலேயே கல்விக்கு என பிரத்யேக கவனம் செலுத்தப்பட்டது மற்றும் இந்த திட்டத்தில் ரொபோட்டிக்ஸ் லேர்னிங், இசை / கலை பயிற்சி மையம், கல்வி டிவிஷன்களுடன் கூடிய கற்றல் மையம், ரியால்டி உதவியிலான கற்றல் மற்றும் இ-லேர்னிங்குடன் கூடிய டிவிஷன் கியோஸ்க் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த திட்டம் குறித்து காசாகிராண்டு, மார்க்கெட்டிங் EVP – திரு. ஈஸ்வர் கூறுகையில், “பிரத்யேக குழந்தைகளுக்கு தோதுவான சிறப்பம்சங்கள் மற்றும் வயதுவந்தவர்களுக்கு பல சொகுசு வசதிகள் கொண்ட ஒரு தனித்துவ திட்டமான காசாகிராண்டு ராயல் – ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். நடப்பு தலைமுறையின் தேவைகளை புரிந்துகொண்டு மிகவும் சிந்தித்து உருவாக்கப்பட்டிருக்கும் பல நவீன வசதிகளை இங்கே குழந்தைகள் அனுபவித்து மகிழலாம். இது, ஒரு பாதுகாப்பான சுற்றுச்சூழலில் ஒருவரோடொருவர் கலந்து கற்றலுக்கு குழந்தைகளுக்கு சிறந்த சமுதாயமாகும். முக்கியமான அமைவிடம் மற்றும் நியாயமான விலை இதை தவிர்க்க முடியாததாக ஆக்கியிருக்கிறது,” என்றார்.
இந்த திட்டத்தில் 63 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட திறந்தவெளி இடம் வாகனமில்லாத ஒரு பொழுதுபோக்கு இடமாக, குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சிரமமின்றி சுலபமாக அணுகக்கூடிய இடமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பத்திரமான, பாதுகாப்புடைய சுற்றுச்சூழலை உறுதிசெய்வதற்கு, இந்த திட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட செயலி சார்ந்த விசிட்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் உள்ளது மற்றும் குழந்தைகள் விளையாடும் பகுதியை எங்கிருந்தும் பார்ப்பதற்குரிய நேரடி காண் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேலையிலிருக்கும்போது பள்ளிக்கூடம் விட்டபிறகு குழந்தைகள் காத்திருப்பதற்குரிய மற்றும் அவர்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்குரிய கூடமும் உள்ளது.
இதன் இடஅமைவு இந்த திட்டத்தை ஈர்ப்பதற்குரிய மற்றொரு முக்கிய காரணமாகும். சோழிங்கநல்லூர் சந்திப்பிலிருந்து கல் எறியக்கூடிய தூரத்திலும், உத்தேசிக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையம் அருகாமையிலும் திட்டம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். இதைச் சுற்றி பெயர்பெற்ற கார்ப்பேரேட் நிறுவனங்கள், ஐடி கம்பெனிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் இன்னும் பல உள்ளன. அறிமுக கட்டத்தில் திட்டத்தின் விலை ஒரு சதுரஅடிக்கு ரூ.4399 ஆகும்.
இத்திட்டம் தமிழ்நாடு RERA TN/29/Building/175/2019-ன் கீழ், பதிவு செய்யப்பட்டிருக்கிறது மற்றும் இதை 24 மாதங்களுக்குள் ஒப்படைக்கப்படும்.
காசாகிராண்டு பில்டர் பிரைவேட் லிமிடெட் குறித்து : 2004-ம் ஆண்டில் நிறுவப்பட்ட காசாகிராண்டு, மக்களின் விருப்பங்களுக்கு வடிவம் தந்து மதிப்பினை வழங்குவது மீது வலுவான பொறுப்புறுதி கொண்டிருக்கும் ISO சான்றிதழ் பெற்ற ஒரு ரியல் எஸ்டேட் பெருநிறுவனமாகும். சென்னை, பெங்களுரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 20 மில்லியன் சதுர அடிக்கும் கூடுதலாக முதன்மையான குடியிருப்புத்திட்டங்களை இந்நிறுவனம் உருவாக்கி வழங்கியிருக்கிறது. இந்நகரங்களில் 90 செயல்திட்டங்களில் ஆனந்தமாக வாழ்க்கையை நடத்திவரும் 15000-க்கும் அதிகமான குடும்பங்கள், காஸாகிராண்டின் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் தரம் வாய்ந்த செயல்பாட்டுக்கும் சாட்சியமாக திகழ்கின்றன. தனது தொழில்முறை பயணத்தில் 14-வது ஆண்டில் வெற்றிநடை போடும் காஸாகிராண்டு ரூ. 6500 கோடி மதிப்புள்ள புதிய செயல்திட்டங்களை பல்வேறு நிலைகளில் செயல்படுத்தி வருகிறது.






