
‘குரு‘– விற்கு ஹலோ சொல்லுங்கள்: இந்திய உணவகத் துறைக்காக உருவாக்கப்பட்ட ஸ்விகியின் 24×7 ஏஐ வணிகக் கூட்டாளியை அறிமுகப்படுத்துகிறோம்
- ஸ்விக்கி-யில் 24×7 மணி நேரமும் செயல்படும் தனிப்பட்ட ஏஐ உணவகப் பங்குதாரர் செயலி உள்ளது. இது உணவக உரிமையாளர்கள், தங்கள் வருவாய் விவரங்களை ஆழமாக ஆய்வு செய்யவும், விளம்பரப் பிரச்சாரங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கவும், அத்துடன் விளம்பரப் பிரச்சாரங்கள் மற்றும் தள்ளுபடிகளை உடனடியாகத் தொடங்கவும் மாற்றியமைக்கவும் உதவுகிறது.
- இந்த வசதி இந்தி, கன்னடம், தமிழ், அசாமி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் உள்ளது.
சென்னை 19 ஆகஸ்ட் 2026: ஸ்விக்கி (ஸ்விக்கி லிட், என்எஸ்இ: ஸ்விக்கி / பிஎஸ்இ: 544285), இந்தியாவின் முன்னோடி ‘ஆன்-டிமாண்ட்’ தளமான இந்நிறுவனம், தனது உணவகப் பங்காளிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குரு எனும் 24×7 ஏஐ வணிகப் பங்காளர் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தனித்துவமான இந்த ஏஐ உதவியாளர், ஸ்விக்கியின் உணவகப் பங்காளிகள் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்கவும், விற்பனைச் செயல் முறைகளை மேம்படுத்தவும், செயல்பாடு தொடர்பான சந்தேகங்களுக்குச் சில நொடிகளில் தீர்வு காணவும் உதவுகிறது – இவை அனைத்தையும் பயன்படுத்த எளிதான, ஒரே உரையாடல் வழி சாட் மூலம் சாத்தியமாகிறது. இது இந்தி, கன்னடம், தமிழ், அசாமி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளிலும் உள்ளது. மேலும், இது உணவகப் பங்காளிகள் தங்கள் விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிச் சலுகை நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், வரி அறிக்கைகள் மற்றும் கட்டணச் சுருக்கங்கள் உள்ளிட்ட கட்டண விவரங்களை விரிவாகப் பார்வையிடவும் உதவுகிறது.
குருவின் மூலம், ஸ்விக்கியின் உணவகப் பங்காளிகள் 24×7 மணி நேரமும் செயல்படும் ஒரு ஏஐ உதவியாளரைப் பெறுகிறார்கள். இது அன்றாட உணவக நிர்வாகத்தை எளிதாக்கும் வகையிலான பல்வேறு பணிகள் மற்றும் சந்தேகங்களுக்குத் தீர்வு காண உதவுகிறது. உணவகப் பங்காளிகள் குருவைப் பயன்படுத்தி, ஒரே ஒரு ‘சாட் ப்ராம்ப்ட்’ மூலமாகவே தங்கள் விளம்பரப் பிரச்சாரங்களைத் தொடங்கவும், மதிப்பாய்வு செய்யவும் மற்றும் மாற்றியமைக்கவும் முடியும். அத்துடன், தங்கள் ஜிஎம்வி மற்றும் ஆர்டர்கள் குறித்த முழுமையான ஃபன்னல் பகுப்பாய்வு, சிறப்பாகச் செயல்படாத அம்சங்கள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் அவற்றைச் சரிசெய்வதற்கான பரிந்துரைகள் ஆகியவற்றையும் அவர்கள் பெறலாம். காலப்போக்கில் தொடர்ந்து கண்காணிக்கப்படும் விற்பனை, ஆர்டர்கள், சராசரி ஆர்டர் மதிப்பு (ஏஓவி) மற்றும் 30-க்கும் மேற்பட்ட பிற அளவீடுகள் உள்ளிட்ட முக்கிய அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் வகையில் குரு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல. குருவில் உள்ள மெனு நுண்ணறிவுகள், கூட்டாளர்களுக்கு செயல்திறனை பிரித்தறிந்து தங்களுக்கு எது சிறப்பாகச் செயல்படுகிறது என்பதையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம், தனிப்பயனாக்கப்பட்ட நுண்ணறிவுகளை வழங்கவும், பொருட்களைச் சேர்க்கவும், விளக்கங்களை உருவாக்கவும், அதிகம் விற்பனையாகும் பொருட்களை முன்னிலைப்படுத்தவும் அனுமதிக்கின்றன.
இந்த அறிமுகம் குறித்து ஸ்விக்கி உணவு வணிகத்துறையின் தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் கபூர் விரிவாகப் பேசுகையில், “இன்று, ஏஐ வணிகங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைத்துள்ளதுடன், பல்வேறு துறைகளிலும் செயல்திறனை மேம்படுத்தி வருகிறது. 12 ஆண்டுகளுக்கும் மேலாக உணவகங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதால், எங்கள் கூட்டாளர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் செயல்பாட்டுத் தேவைகள் மற்றும் ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஆகியவற்றை நாங்கள் நன்கு அறிவோம். எங்கள் கூட்டுப் பயணத்தின் அடுத்த கட்டமாக, அவர்களின் அன்றாடப் பணிச் செயல் முறைகளில் ஏஐ-யை ஒருங்கிணைக்கிறோம். குருவின் உதவியுடன், தினசரி உணவக நிர்வாகத்திற்கு மறுவரையறை அளிக்கும், உள்ளுணர்வு மிக்க, ஏஐ-யை முதன்மைப்படுத்தும் ஒரு உதவியாளரை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இது 24×7 ஆதரவு, விரைவான கேள்வித் தீர்வுகள் மற்றும் வணிகத்தை வளர்க்க உதவும் செயல்திறன் நுண்ணறிவுகளை வழங்குகிறது.”
720+-க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் குரு திட்டத்தால், அருகாமையில் உள்ள சிறிய உணவகங்கள் முதல் பல கிளைகளைக் கொண்ட உணவகங்கள் வரை 2.7 லட்சத்திற்கும் அதிகமான உணவகங்கள் பயனடையும். உணவகக் கூட்டாளர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும், நிகழ் நேரத் தகவல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் தேவையான கருவிகளை வழங்குவதில் ஸ்விக்கி கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தப் புதுமையான திட்டம் பிரதிபலிக்கிறது.





