
கோவிட் – 19 காலகட்டங்களில் நடப்பதாக உள்ள கதை.
பேருந்தில் பிக்பாக்கெட் அடிக்கும் நான்கு பேர் வேறு வேறு ஊர்களில் இருந்து வந்து ஒரே அறையில் தங்கிஇருக்கிறார்கள்,
ஒரு பெரிய பங்களாவில் கோடிக்கணக்கான பணம் உள்ளதாக மொபைலுக்கு ஒரு தகவல் வருகிறது,
இதை அடுத்து நால்வரும் அந்த பங்களாவிற்கு செல்கின்றனர், ஆனால் அவர்களினல உடல் உறுப்புகளை திருட இங்கு தந்திரமாக அழைத்து வரப்பட்டிருப்பது தெரியவரும்போது நால்வரும் அதிர்ச்சி அடைகிறனர்,
இதிலிருந்து மீண்டு அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது மீதி கதை,
பிரதான பாத்திரங்களே ஏற்று நடித்திருக்கும் புகழ், ரவி மரியா, மற்றும் பிரக்யா நயன் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன,
யு கே செந்தில்குமாரின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது, படத்தில் சிறப்பம்சங்களில் முதலிடம் பெறுவது ஒளிப்பதிவு தான்.
படத்தை எழுதி இயக்கிய சஜோ சுந்தர் முருகேசன் முதல் படத்திலேயே பாஸ் மார்க் பெற்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
_மணவூர் து.சண்முகம் .எம்.ஏ.,





