- பொது

உங்கள் பணியமைவிடத்தில் பிற நபர்களுடன் பாதுகாப்பாக உரையாடுங்கள்!

உங்கள் பணியமைவிடத்தில் பிற நபர்களுடன் பாதுகாப்பாக உரையாடுங்கள்!

சென்னை, 21 ஜுலை 2021: பணியாளர்களுடனோ அல்லது வாடிக்கையாளர்களை சந்திக்கிறபோதோ அணுகும் திறனும், பணியமைவிடங்களில் “மானிட பிணைப்பின்” சிறந்த உணர்வும், அத்தியாவசியமான அம்சங்களாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த அம்சத்தின் முக்கியத்துவம் தொடர்ந்து இருப்பது ஒருபோதும் மறையாது என்ற நிலையில், நமது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பும், தூய்மை பராமரிப்பு நிலையும் நடப்பு பெருந்தொற்றுப் பரவல் சூழ்நிலையில் இன்னும் அதிக இன்றியமையாத அம்சமாக உருவெடுத்திருக்கிறது.
கடந்த ஆண்டில், நாம் இயங்குகின்ற வழிமுறையில் நாம் அனைவருமே பல மாற்றங்களை செய்திருக்கிறோம் மற்றும் சிரமங்களையும் மீறி, வளர்ச்சி காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். ஹஃபேல் – ல், மாறி வருகின்ற காலங்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மிக விரைவாக நாங்கள் மாறினாலும், இந்த பெருந்தொற்றுச் சூழல், கூடிய விரைவில் ஒருநாள் குறைந்து மறைந்துவிடும் என்ற நம்பிக்கையையும் நாங்கள் கொண்டிருந்தோம். கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தின் வாழ்க்கைக்கு மீண்டும் ஒருமுறை நாம் விரைவிலேயே திரும்பச்செல்வோம் என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இருந்தபோதிலும், உடல்நலம், பாதுகாப்பு மற்றும் தூய்மை நிலை பற்றி நாம் இந்த சூழலிலிருந்து கற்றுக்கொண்டிருக்கின்ற பாடங்கள் இனியும் தொடர்ந்து இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆகவே, சமீப காலங்களில் வன்பொருட்களை அறிமுகம் செய்யும்போது எங்களது கவனமானது, நீண்டகால நிலைப்புத்தன்மை மற்றும் அதே வேளையில் உடனடி பயன்பாடு ஆகிய அம்சங்களின் மீதே இருந்து வந்திருக்கிறது.
இதையொட்டி, “ரெட்ரோஃபிட் கிளாஸ் பார்ட்டிஷன் தீர்வு” என்பதை ஹஃபேல் அறிமுகம் செய்கிறது. இந்த பெயர் சுட்டிக்காட்டுவதைப் போல துளைகள் அல்லது காடிகளை டிரில்லிங் செய்வது போன்ற விரும்பத்தகாத நிரந்தர மாற்றங்களை செய்வதற்கான அவசியமின்றி, ஏற்கனவே அங்கே இருக்கின்ற டெஸ்குகள் மற்றும் டேபிள்களின் மீது கிளாஸ் (கண்ணாடி) பார்ட்டிஷன் கிளாம்ப்புகளைப் பொருத்தமுடியும். மரம், மார்பிள், குவார்ட்ஸ் கட்டை அல்லது 45 மி.மீ. வரையிலான அடர்த்தியைக் கொண்டிருக்கின்ற கண்ணாடி போன்ற எந்த மூலப்பொருளாலும் செய்யப்பட்டிருக்கின்ற டேபிள்டாப்கள் மீது மிக எளிதாகப் பொருத்தமுடியும். இந்த கிளாஸ் பார்ட்டிஷனின் ஒளிபுகும் தன்மை, சக பணியாளர்களோடு அல்லது வாடிக்கையாளர்களோடு பேசி தொடர்புகொள்வதற்கு போதுமான பாதுகாப்புள்ள வழிமுறையை வழங்குகிறது. அதே நேரத்தில் நோய்தொற்று ஏற்படாமல் முன்தடுக்கக்கூடிய பாதுகாப்பை உறுதிசெய்கிறவாறு நேரடி தொடர்பாடலையும் கட்டுப்படுத்துகிறது. தேவைப்படாத நேரங்களில், ஒரிஜினல் டெஸ்க் டேபிளின் அழகியல் அம்சத்தை பாதிக்காமல், எளிதாக பொருத்தியதைப்போலவே மிக எளிதாக இந்த கிளாம்ப்புகளை அகற்றிவிட முடியும்.
அதிக விவரங்களுக்கு காண்க: @ Häfele

About expressuser

Read All Posts By expressuser