- பொது

ஹார்பிக் மிஷன் பானி உலக கழிப்பறை தினத்தில் நீடித்திருக்கும் துப்புரவுக்கான இந்தியாவின் முதன்முதல் முன்னுரையைத் துவக்குகிறது!

ஹார்பிக் மிஷன் பானி உலக கழிப்பறை தினத்தில் நீடித்திருக்கும் துப்புரவுக்கான இந்தியாவின் முதன்முதல் முன்னுரையைத் துவக்குகிறது!

• ”101 ஸ்டோரீஸ் ஆஃப் இன்ஸ்பிரேஷன்” என்கிற துப்புரவுப் பணியாளர்கள் மீதான ஒரு காபி டேபிள் புத்தகத்தை மாண்புமிகு இந்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு. வெங்கையா நாயுடு ஆமோதித்தார்
• ஜல்சக்தி அமைசக்கத்தின் மத்திய கேபினட் அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் ராஷ்ட்ரிய ஸ்வச்ச கேந்திராவில் முன்னுரையை துவக்கி வைத்தார்
• ‘அனைவருக்கும் பாதுகாப்பான கழிப்பறைகளை’ உருவாக்குவதற்கான தேவையை மீண்டும் வலியுறுத்துகிற இந்தியாவின் முதல் துப்புரவு உறுதிமொழியையும் ஹார்பிக் மிஷன் பானி துவங்கியது.

சென்னை: ஹார்பிக் மிஷன் பானி இந்தியாவில் ‘சுத்தமான குடிநீர், நீடித்திருக்கும் துப்புரவு’ என்கிற அனைவருக்குமான சுகாதார உறுதிமொழி மற்றும் முன்னுரையை மாண்புமிகு ஜல்சக்தி அமைச்சர் – திரு கஜேந்திர சிங் செகாவத் மற்றும் ஐந்து முக்கிய பெண் தலைவர்கள் – கவுசர் முனிர் (பாடலாசிரியர்), சவிதா புனியா (இந்திய ஹாக்கி விளையாட்டு வீராங்கனை), ஸ்மிருதி மந்தனா (இந்திய கிரிக்கெட் வீராங்கனை), மற்றும் லவ்லினா போர்கோஹைன் (ஒலிம்பிக்கின் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை) ஆகியோரைக் கொண்டு உலக கழிப்பறை தினத்தில் மிஷன் பானி துப்புரவு மன்றத்தில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை குடியரசுத் தலைவர் திரு வெங்கையா நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்ட ‘101 ஸ்டோரீஸ் ஆஃப் இன்ஸ்பிரேஷன்’ (101 ஊக்கமளிக்கும் கதைகள்) என்கிற அதன் வகையில் முதன்முதலாக காபி டேபிள் புக் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்களின் நம்பிக்கை ஊக்கமளிக்கும் கதைகளைக் காட்சிப்படுத்துகிறது. நமது தூய்மை மற்றும் துப்புரவுத் தேவைகளில் அக்கறை எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு தூய்மையான மற்றும் அதிக சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு தங்களின் வாழ்க்கையை பணையமா வைத்த பணியார்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒருங்கிணைந்த சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கவுன்சிலால் தொகுக்கப்பட்டது. கையினால் மலம் அள்ளுவதிலிருந்து கண்ணியமான வாழ்வாதாரத்திற்கு வாழ்க்கையை மாற்றியத் தனிநபர்களின் கதைககளைக் கொண்டுள்ளது.
ஸ்வச்ச பாரத் இயக்கம் மற்றும் ஐநாவின் நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளுடன் இணைந்து, விழிப்புணர்வினை அதிகரிப்பதிலும் ”யாரையும் பின்னால் விட்டுவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கையை திரட்டுவதிலுமான பணிக்கான பொறுப்பினை ஹார்பிக் மிஷன் கொண்டுள்ளது. உள்ளடக்கிய துப்புரவுக்கான இந்தியாவின் முதன்முதல் முன்னுரை என்பது ஒரு தூய்மையான ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைவதற்கான தேவையை மீண்டும் வலியுறுத்துகிற ஒரு உள்ளடக்கிய சூழலமைப்பினை கூட்டாக மேம்படுவதை நோக்கிய ஒரு படியாகும்.
ரெக்கிட், தெற்காசியாவின், மூத்தத் துணைத் தலைவர் கவுரவ் ஜெயின் கருத்துத் தெரிவிக்கையில், “ரெக்கிட்டின் போராட்டம், உயர்தரமான சுகாதாரம், நலன் மற்றும் ஊட்டச்சத்துக்கான அணுகலை ஒரு வசதியாக அல்லாமல் உரிமையாக ஆக்குவதாகும். இன்று, உலக கழிப்பறை தினத்தில், ஏழ்மையை ஒழிப்பதில் அவசியமான நீர் விநியோகம் மற்றும் துப்புரவுக்கான வசதிக்கான அணுகலை இயல செய்வதற்கான ஒரு சூழலமைப்பினை உருவாக்குவதற்கான எங்களின் பொறுப்பினை மீண்டும் வலியுறுத்துகிறோம். பாதுகாப்பான நீர் மற்றும் துப்புரவுக்கான இந்தியாவின் முதன்முதல் முன்னுரையை உயர்த்திப் பிடிப்பதற்கான ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்வதற்காக நாட்டினை நாங்கள் ஒன்று சேர்க்கிறோம். பாதுகாப்பான நீர் மற்றும் பாதுகாப்பான கழிப்பறைகள் என்பதன் பொருள் ஒரு ஆரோக்கியமான தேசமாகும்; நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான மனித உரிமைக் கூறுகளில் ஒன்றாக இது வெளிப்பட வேண்டும்.”
துப்புரவுக்கான உறுதி மொழி பிரபல பாடலாசிரியர் கவுசர் முனிரால் எழுதப்பட்டது, அது அனைவருக்கும் சுத்தமான நீர் மற்றும் துப்புரவுக்கான அணுகலை உறுதி செய்வதற்காக மக்கள் அனைவரையும் ஒன்றாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது.
அக்ஷய் குமார், நடிகர் மற்றும் மிஷன் பானியின் பிரச்சாரத் தூதுவர் மேலும் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகளில், நாடெங்கிலும் துப்புரவை மேம்படுத்தவதிலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனாலும் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவிலான மக்களுக்கு கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீருக்கான அணுகல் கிடைக்கவில்லை. ரெக்கிட் மற்றும் நெட்ஒர்க்18 குழுமத்தின் மிஷன் பானி முய்றசியின் மூலமாக துப்புரவுக்கான உறுதிமொழியை எடுக்க வைப்பதன் மூலம் ஒரு நடத்தை மாற்றத்திற்கு நம்மை தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். துப்புரவின்மை சுகாதாரத்தை மட்டும் பாதிக்கவில்லை பொருளாதார வளர்ச்சியையும் பின்தங்க வைக்கிறது. இந்த முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிப்பதும், பெரிய எண்ணிக்கையிலான மக்களிடம் குறிப்பாக ஊரக இந்தியாவில் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானதாகும்.”
உலக கழிப்பறை தினத்தில் இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்தான பிரபல பொது முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நிலைத்திருக்கக்கூடிய துப்புரவு ம்றறும் பாதுகாப்பான குடிநீர் ஆகியவற்றை மிக முக்கியமான மனித உரிமைகளில் ஒன்றாக அணுகுவதற்கான வாதத்தினை நோக்கி உரையாடல்ள் தூண்டியது. வாய்ப்புகள் குறைந்த பாலினங்கள், சாதிகள், வகுப்புகள், மற்றுதி திறன்களைின் கவலைகளை மனதில் கொண்டு, உள்ளடக்கும் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை கூட்டாக மேற்காள்வதற்காக இந்திய குடிமக்களுக்கு இந்த மன்றம் அழைப்பு விடுத்தது. ரிஷிகேஷ் மற்றும் பாட்டியாலாவில் உள்ள உலக கழிப்பறைக் கல்லூரிகளில் இருந்தான நேரடி அறிக்கைகள், சிறப்பு பேட்டிகள் மற்றும் சாதனையாளர்களின் பயணங்கள், நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டன.
ஹார்பிக் மிஷன் பானி 2022-ல் ஆன்கிரவுண்ட் கூட்டாளிகள் மற்றும் நெட்ஒர்க்18 மூலமாக இந்தியா முழுவதும் கழிப்பறை பயன்படுத்தல் மற்றும் பரமரிப்பதில் நடத்தை மாற்றத்தை கொண்டு வருவதற்காக 200 மில்லியன் இந்தியர்களை சென்றடைவதை லட்சியமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் ”யாரையும் பின்னால் விட்டுவிடாமல்” அனைவருக்குமான பாதுகாப்பான சுத்தமான கழிப்பறைகளை இயலச் செய்ய உதவுவதற்காக WASH-ல் (நீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு) கவனம் செலுத்தும், மற்றும் இந்தத் திட்டத்தின் வெற்றி ஸ்வச்ச சர்வேக்ஷன் தரவரிசைகள் மூலமாக அளவிடப்படும். 2021-ல் ஆறு உலக கழிப்பறைக் கல்லூரிகளாக இருப்பதை இந்தியாவெங்கிலும் 15 கல்லூரிகளாக பரவச் செய்வதற்கு ஹார்பிக் திட்டமிட்டு்ள்ளது. இந்த உலக கழிப்பறைக் கல்லூரிகள் 2 லட்சம் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் நீட்டிகக்கப்பட்டக் குடும்பங்களுக்கு பயன் தரும்.
இந்த உறுதிமொழி ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திராவில் எடுத்துக்கொள்ளப்பட்டது, அது சுத்தமான குடிநீர், அனைவருக்குமான கழிப்பறை, தூய்மை, பாதுகாப்பான சுகாதார சுழற்சி (உருவாக்கம், பயன்பாடு, பராமரிப்பு, சுத்திகரிப்பு மற்றும் மறுபயன்பாடு), நிலத்தடி நீரையும் மேற்பரப்பு நீரையும் ஒருங்கிணைப்பை பராமரிப்பதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பாதுகாப்பான கழிப்பறைகள், மற்றும் சுத்தமான பசுமையை வாழ்க்கையில் கவனத்தை செலுத்துவதற்காக,மகாத்மா காந்தி நினைவாக் கட்டப்பட்டது.

About expressuser

Read All Posts By expressuser