- பொது

நெக்ஸ்ட்ரா (Nxtra) பை ஏர்டெல்-ன் புதிய 38 MW ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டர் சென்னையில் தொடக்கம்!

சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல்-ன் மூன்றாவது பெரிய டேட்டா சென்டர், இப்போது 11 பெரிய மற்றும் 120 டேட்டா சென்டர்களில் இந்தியாவில் தனது வலையமைப்பின் தலைமையை மேலும் உறுதிப்படுத்துகிறது

இந்த புதிய டேட்டா மையம், வாடிக்கையாளர்களுக்கு முனைக்கு முனை தீர்வை வழங்குவதற்கு ஏர்டெல்-ன் உலகளாவிய கடலடி கேபிலுடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது

சென்னை/டெல்லி, நவம்பர் 23, 2021: பார்தி ஏர்டெல் (“ஏர்டெல்”)-ன் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல் (Nxtra by Airtel) தனது புதிய ஹைப்பர்ஸ்கேல் டேட்டா சென்டரை இன்று தொடங்கியுள்ளது. இந்த நவீன வசதி மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் டிஜிட்டல் முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது சென்னையில் உள்ள நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல்-ன் மூன்றாவது பெரிய டேட்டா மையமாகும். இந்த 38 MW LEED சான்றிதழ் பெற்ற வசதியானது 270,000 சதுர அடியில் அமைந்துள்ளது. ஏர்டெல்-ன் உலகளாவிய கடலடி கேபில் வலையமைப்புடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஹைப்பர்ஸ்கேலர்களுக்கு முனைக்கு முனை பாதுகாப்பான இணைப்பு தீர்வை வழங்குகிறது. இந்த புதிய வசதி குறித்து மேலும் விவரங்களுக்கு புதிய வசதியை [URL சேர்க்கவும்] URL-க்கு விஜயம் செய்யவும்- https://youtu.be/jFef_Oe7bh4

ஏர்டெல் பிசினஸ், இயக்குநர் மற்றும் CEO திரு அஜய் சிட்கரா பேசுகையில், “இந்தியாவில் உருவாகிவரும் டிஜிட்டல் இந்தியா வாய்ப்பிற்கு சேவை புரிய முனைப்புடன் முன்னேறுவதற்கு எங்களது பயணத்தில் இது ஒரு மைல்கல்லாகும். கேபில் தரை நிலையங்களுக்கு உத்திவாய்ந்த அமைவிடம் மற்றும் அணுக்கம் கொண்ட சென்னை, தெற்காசியாவிற்கு ஒரு பிராந்திய தரவு மையமாக ஆவதற்கு வாய்ப்புள்ளது. நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல் இந்த நகரத்திலிருந்து பெரிய இந்திய மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே சேவை புரிந்து வருகிறது. இங்கு எங்கள் செயல்பாடுகளை விரிவு படுத்துவதற்கு தொடர்ந்து முதலீடு செய்து வருவோம். இந்த முக்கிய டிஜிட்டல் உள்கட்டமைப்பை அமைப்பதற்குரிய சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு உதவி வழங்கியதற்கு மாநில அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.

இந்த புதிய தொடக்கத்தின் மூலம் நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல் இந்திய தரவு மைய தொழில் தனது வலையமைப்பு முன்னிலை வகிப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் 11 ஹைப்பர்ஸ்கேல் மற்றும் 120 நவீன தரவு மையங்களைக் கொண்டு இந்தியாவில் தனது மிகப்பெரிய தரவு மையங்களை இது இயக்கி வருகிறது.
5G வரவிருக்கும் நிலையில், கிளவ்ட் மற்றும் உள்நாட்டு தரவு சேமிப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு மாற்றும் ஒரு வேகமாக வளரும் டிஜிட்டல் பொருளாதார நாடான இந்தியா நம்பத்தகுந்த தரவு மைய தீர்வுகளுக்கு ஒரு உறுதியான தேவையை எதிர்கொண்டிருக்கிறது. இந்திய தரவு மைய தொழில் 2023*ம் ஆண்டில் தனது நிறுவப்பட்ட திறனான ஏறக்குறைய 450MW லிருந்து 1074 MW திறனுக்கு இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பெரிய தேவையை நிறைவேற்றுவதற்கு, நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல் 2025ம் ஆண்டில் தனது திறனை 3X முதல் 400 MW-க்கு மேம்படுத்தும். இதில் முக்கிய பெரு நகரங்களில் ஹைப்பர்ஸ்கேல் தரவு மைய பூங்காக்களை அமைப்பது உள்ளடங்கும். நெக்ஸ்ட்ரா பை ஏர்டெல், தனது தரவு மையங்களுக்கு பசுமை எரிசக்தி பயன்படுத்துவதை ஏற்கனவே அதிகரித்து வருகிறது மற்றும் இது ஏர்டெல்-ன் ஒட்டுமொத்த GHG உமிழ்வு குறைப்பு இலக்குகளின் ஒரு பகுதியாக புதுப்பிக்கும் ஆதாரங்கள் மூலம் இந்த மையங்களின் தேவையில் 50% எரிசக்தியை பெறுவதற்கு நோக்கம் கொண்டிருக்கிறது.

About Airtel
Headquartered in India, Airtel is a global communications solutions provider with over 480 Mn customers in 17 countries across South Asia and Africa. The company ranks amongst the top three mobile operators globally and its networks cover over two billion people. Airtel is India’s largest integrated communications solutions provider and the second largest mobile operator in Africa. Airtel’s retail portfolio includes high speed 4G/4.5G mobile broadband, Airtel Xstream Fiber that promises speeds up to 1 Gbps with convergence across linear and on-demand entertainment, streaming services spanning music and video, digital payments and financial services. For enterprise customers, Airtel offers a gamut of solutions that includes secure connectivity, cloud and data centre services, cyber security, IoT, Ad Tech and cloud based communication. For more details visit www.airtel.com

About expressuser

Read All Posts By expressuser