
உணவுக் கூடையைப் பன்முகப்படுத்த மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை அணுகுதல்
– டாக்டர் ரத்னா கும்ரியா, இயக்குனர்-பயோடெக்னாலஜி, விவசாயத்தில் புதுமைக்கான கூட்டணி
உலக மக்கள் தொகையில் சுமார் 45% பேருக்கு விவசாயம் முக்கிய தொழில் மட்டும் அல்ல, ஆனால் பலருக்கு அதுவே வாழ்வாதாரமாக உள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்துடன் மட்டுமல்லாமல் நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளுடன் ஒரு அங்கமாகும். விவசாயம் உலகிற்கு உணவளித்தாலும், ஆடைகொடுத்தாலும், அதன் தற்போதைய நிலைமை தொடர்ந்து ஒரே மாதிரியாக உற்பத்தியை வழங்கும் செயல்பாடாக இல்லை. உலகளவில், விளை நிலத்தில் சுமார் 26% மற்றும் நன்னீரில் 70% விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 2050 ஆம் ஆண்டளவில் உணவு மற்றும் உயிரி எரிபொருளுக்கான தேவை உட்பட அதிகரித்து வரும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய உலகளாவிய விவசாய உற்பத்தி தற்போதைய அளவுகளில் இருந்து 60-70% அதிகரிக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இதில் உணவுத் தேவை மற்றும் உயிரி எரிபொருள் தேவையும் அடங்கும். தற்போது, உலக மக்கள் தொகையில் சுமார் 55% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர், இது 2050 ஆண்டுக்குள் சுமார் 70% ஆக அதிகரித்து உணவு உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விவசாயத்திற்கு மிகவும் பேரழிவு தரும் சவாலாக இருப்பது பருவநிலை மாற்றம். இந்த கணிக்க முடியாத வானிலை நிலைமைகள் விளைச்சலை பாதிப்பது மட்டுமல்லாமல் இயற்கை வளங்களையும் குறைத்துவிடுகிறது. பூமி வெப்பமாதலால் ஏற்படும் வெப்பம், வானிலை மாற்றங்கள், வறட்சி, கடுமையான வெயில் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் விளைவாக பத்தாண்டுக்கு ஒருமுறை விளைச்சலில் 5% உற்பத்தி குறைந்துள்ளது.. செறிவுமுறை விவசாயம் மற்றும் மோசமான விவசாய செயல்முறைகள் மண் மற்றும் நீர்நிலைகளின் ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிட்டன. மண்ணரிப்பு மற்றும் குறைந்துவரும் மண் வளத்தினால் கடந்த 40 ஆண்டுகளில், மூன்றில் ஒரு பங்கு விளை நிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இயற்கை வாழ்விடங்களை கண்மூடித்தனமாக அழித்ததன் காரணமாக பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகரித்துள்ளன. நிலையான முறையில் பயிர் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமே உணவு பாதுகாப்பை அடைவதற்கான ஒரே வழி என்று தோன்றுவதால், விவசாயிகள் மற்றும் தாவர இனவிருத்தியாளர்கள் முறையே நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் பயிர் விதைகளை மேம்படுத்துவதன் மூலமும் இந்த தீர்க்க முயற்சிக்கின்றனர். சிறந்த விதை வகைகளை உருவாக்க ஆகும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, இனவிருத்தியாளர்கள் மேம்பட்ட பண்புகள் கொண்ட பயிர்களை உருவாக்க பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட வேண்டும். விவசாயத்தில் நடப்பில் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் சிக்கல்கள் இன்விருத்தியாளரின் தொலைநோக்கு பார்வைக்கு கடுமையாக சவால் விடுகின்றன. எனவே, அவர்கள் பயிரில் தேவையான பண்பு மேம்பாடுகளை வேகமாகப் பெற நவீன தொழில்நுட்பத்துடன் பயிர் பற்றிய தங்கள் ஆழமான அறிவை நம்பியுள்ளனர்.
மரபணு மாற்றம் (ஜீன் எடிட்டிங்) போன்ற புதிய இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் இனப்பெருக்க செயல்திறனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன. மரபணு மாற்றத்தில், வெளிப்புற மரபணுக்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் தாவரத்தின் மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மரபனு மாற்று இயந்திரங்களும் டிரான்ஸில் வழங்கப்படுவதால், பாரம்பரிய இனப்பெருக்கம் மூலம் பல குறுக்கு வெட்டு மற்றும் தலைமுறைகளுக்குப் பிறகு பெறப்பட்ட தயாரிப்பைப் போலவே இந்த நுட்பத்திலும் இறுதி தயாரிப்பு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன், துல்லியம் மற்றும் வேகத்துடன் நாம் மரபணுக்களை மேம்படுத்த முடியும், எனவே இந்த தொழில்நுட்பம் பொருளாதார ரீதியாகவும் இலாபகரமானது. மரபணு மாற்றத்தின் அடிப்படையில் குறைந்த அளவு இனப்பெருக்கம் செய்யப்படுவதால், இதற்கு தொடக்கத்தில் குறைந்த முதலீடு தேவைப்படுகிறது. இது பொதுத்துறை உற்பத்தி நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களை மரபனு மாற்றம் மூலம் பயன்பெறவும், மேம்படுத்தப்பட்ட பயிர்களை உருவாக்கவும் ஈர்க்கிறது. பல்வேறு வகையான சிறிய மற்றும் குறிப்பிட்ட பயிர்களை உள்நாட்டில் மேம்படுத்த பரந்த அளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படலாம், மேலும் நீங்கள் உங்கள் உணவை பல்வகைப்படுத்தலாம் மற்றும் அதிக ஊட்டச்சத்து பாதுகாப்பைப் பெறலாம். அப்படியிருந்தும், மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள் பாரம்பரியமாக வளர்க்கப்படும் தாவரங்கள் மற்றும் ஜிஎம் (GM) பயிர்களிலிருந்து வேறுபட்டதாகக் கருதப்பட்டால், மரபணு மாற்று தொழில்நுட்பத்தின் நன்மைகள் வீணாகப்போகும்.
மரபனு மாற்றத்தில் உள்ள துல்லியம், பயன்படுத்துவதில் எளிது மற்றும் வாய்ப்புகள் காரணமாக, இது பயிர் உற்பத்தித் திறன், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை அதிகரிக்கவும், விவசாயத்தின் மூலம் சுற்றுச்சூழல் சீரழிவை குறைக்கவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும் பங்களிக்க முடியும்.
விரைவான ஆராய்ச்சி மற்றும் பயிர் மேம்பாடு விவசாயிகளுக்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் மட்டுமல்லாமல், விவசாய மதிப்புச் சங்கிலியில் உள்ள மற்றவர்களுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும். மரபணு மாற்றத்துக்கு உகந்த ஒரு கொள்கை இந்த தொழில்நுட்பத்தின் நன்மைகளை நுகர்வோருக்கு, குறிப்பாக பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுக்களுக்கு பரவலாக விநியோகிக்க உதவும். இந்தியாவின் இனவிருத்தியாளர்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஆதரவாக உள்ளனர், மேலும் இந்த மரபனு மாற்றத்தில் அறிவியல் அடிப்படையிலான நியாயமான ஒழுங்குமுறையை எதிர்பார்க்கின்றனர்.




