- பொது

முன்பதிவு விற்பனையில் கேலக்ஸி Z Flip4, Z Fold4 ஸ்மார்ட்போன்கள்சாதனை!

கேலக்ஸி Z Flip4, Z Fold4 ஸ்மார்ட்போன்கள்சாதனை எண்ணிக்கையில் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதைதொடர்ந்து,இந்தியாவில்ஃபோல்டபில் போன்களின்தேவைஅதிகரித்துள்ளது

 நுகர்வோர் இந்த இரண்டு வகையான போன்களையும் சாதனை வேகத்தில்  முன்பதிவு செய்தது,பயன்படுத்துபவர்களுக்கு தனித்துவமான பலன்களை அளிக்கும் சாதனங்களுக்கான தேவை அதிகம் இருப்பதைக் காட்டுகிறது.

சென்னை – இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங், அதன் சமீபத்திய புதுமையான ஃபோல்டபில் ரகங்களானகேலக்ஸிZ Flip4, Z Fold4 ஸ்மார்ட்போன்களைவாங்குவதற்கான அதிக முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்தியாவில், இந்தநான்காவது-ஜெனரேஷன் ஃபோல்டபில் போன்கள் கடந்த ஆண்டின் முன்பதிவு சாதனைகளை முறியடித்துள்ளது, இது புதிய சாதனங்களின் மீதான நுகர்வோரின் தீவிர ஆர்வத்தை காட்டுகிறது. முன்பதிவுக்கான நேரம் தற்போது நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் உள்ள நுகர்வோர் கேலக்ஸி Z Flip4, கேலக்ஸிZ Fold4 போன்களைSamsung.com மற்றும் அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் நேரடி ரீடெயில் ஸ்டோர்களில் வாங்கலாம்.

“தங்களதுதினசரி வாழ்கையை மேம்படுத்தும், செயல்திறனை எட்ட உதவும், மற்றும்படைப்புத்திறனுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும்ஒருபுதுமையானஸ்மார்ட்போன் அனுபவத்தினை நாடும் நுகர்வோரின் எதிர்பார்ப்புகளோடு, எங்களதுநான்காவது ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்களானகேலக்ஸி Z Flip4, கேலக்ஸிZ Fold4 ஆகியவை ஒத்துப்போகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் வெளியிடும் புதிய ஃபோல்டபில் ரக ஸ்மார்ட்போன்கள் அதன் முந்தை ஜெனரேஷன் போன்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. மேலும், இந்த நான்காவது ஜெனரேஷன் போன்களுக்கு செய்யப்பட்ட முன்பதிவுகள் எதிர்காலத்தில் இதற்கான தேவை எந்தளவிற்கு இருக்கும் என்பதைக் காட்டுகிறது. புதியகேலக்ஸி Z Flip4, கேலக்ஸிZ Fold4 போன்களையும், அவை வழங்கும் சூழல் அம்சங்களையும் நுகர்வோர் பாராட்டியிருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.இன்று முதல்,எங்களது வாடிக்கையாளர்கள் அவர்களது சாதனங்களை பெற்று,கேலக்ஸிZ சீரிஸ்போன்களின் புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை உபயோகித்துஉணர்வதைக் காண, இந்தரகபோன்களின் முன்னோடி நிறுவனம்என்கிற வகையில் நாங்கள் ஆவலுடன் உள்ளோம்,” என்றுசாம்சங் இந்தியா நிறுவனத்தின் மொபைல் பிஸ்னஸ் பிரிவின், வைஸ் பிரசிடென்ட், ராஜு புல்லம் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1- ஆம் தேதியுடன் முன்பதிவுகள் முடிவடைந்ததை அடுத்து, சாம்சங் இந்தியா 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதுவரையில்கேலக்ஸி Z Flip4, கேலக்ஸிZ Fold4 ஆகியவை இந்தியாவின் மிகப் பிரபலமான ஃபோல்டபில் சாதனங்களாக உள்ளன.

Z Flip4 ஸ்மார்ட்போன், சாம்சங்கின் அடையாளமாகத்திகழும் அதன் வெற்றிபெற்றசிறப்பம்சங்களின் அடிப்படையில்உருவாக்கப்பட்டுள்ளது.இதன்கச்சிதமானஅல்ட்ரா-காம்பேக்ட் வடிவமைப்பை தக்கவைத்ததோடு, கூடுதலாகமேம்படுத்தப்பட்ட கேமரா, பெரிய பேட்டரி மற்றும் விரிவாக்கப்பட்ட தனித்துவமாக்கும்வழிகள் (கஷ்டமைசேஷன்) உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களும்சேர்க்கப்பட்டுள்ளன. கேலக்ஸிZ Fold4 – சாம்சங்கின் முழுமையானஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கி, உபயோகிப்பவர்களுக்கு பல புதிய விஷயங்களைசாத்தியப்படுத்தியுள்ளது.மேம்பட்ட கேமரா தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல்மிக்க மொபைல் புராசஸர்களுடன் சேர்த்து, வடிவத்திலிருந்து-வடிவம் மாறும் டிசைன், காட்சிகளுக்குள் அழைத்துச்செல்லும் தத்ரூபமான ஃபிளெக்ஸிபில் டிஸ்பிளே, கணினியில்உள்ளது போன்ற மல்டி-டாஸ்கிங்அம்சங்கள்ஆகியவையும்Z Fold4-இல்உள்ளன.

போரா பர்ப்பில், கிராஃபைட், மற்றும் பிங்க் கோல்ட் ஆகியவண்ணங்களில் கிடைக்கும், கேலக்ஸி Z Flip4 ஸ்மார்ட்போனின்8GB+128GB ரகம், ரூ.89,999/-மற்றும் 8GB+256GB ரகம்ரூ.94,999/- ஆகிய விலைகளில்கிடைக்கின்றன. கிளாஸ் நிறங்கள் மற்றும் விருப்பமான பிரேம்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பினைவழங்கும் பிஸ்போக்ரகம், சாம்சங் லைவ்மற்றும் சாம்சங்கின்பிரத்தியேகக் ஸ்டோர்களில் ரூ.97,999/-க்கு கிடைக்கும். கிரேகிரீன், பேஜ் மற்றும் பேன்ட்டம் பிளாக்ஆகிய வண்ணங்களில் வரும், கேலக்ஸிZ Fold4 ஸ்மார்ட்போனின் 12GB+256GB ரகம்ரூ.1,54,999/- மற்றும்12GB+512GB ரகம் ரூ.1,64,999/- ஆகிய விலைகளில் கிடைக்கின்றன. இதன்12GB+1TBரகத்தினை நுகர்வோர் பிரத்தியேகமாக சாம்சங் லைவ் மற்றும் சாம்சங்கின் பிரத்தியேக ஸ்டோர்களில் ரூ.1,84,999/-என்கிறவிலைக்கு வாங்கலாம்.

கேலக்ஸி Z Fold4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரூ.34,999/- மதிப்புள்ள கேலக்ஸிவாட்ச்4 கிளாஸிக்46mm BT ஸ்மார்ட்வாட்ச்சை வெறும் ரூ.2,999/-க்குபெறலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் எச்டிஎஃப்சிகிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.8,000/- கேஷ்பேக்கைப் பெறலாம் அல்லது ரூ.8,000/- அப்கிரேடு  போனஸைப் பெறலாம். கேலக்ஸி Z Flip4 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரூ.31,999/- மதிப்புள்ள கேலக்ஸிவாட்ச்4 கிளாஸிக்42mm BT ஸ்மார்ட்வாட்ச்சை வெறும் ரூ.2,999/-க்குபெறலாம். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் எச்டிஎஃப்சிகிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.7,000/- கேஷ்பேக்கைப் பெறலாம் அல்லது ரூ.7,000/- அப்கிரேடு  போனஸைப் பெறலாம்.

About Samsung Electronics Co., Ltd.
Samsung inspires the world and shapes the future with transformative ideas and technologies. The company is redefining the worlds of TVs, smartphones, wearable devices, tablets, digital appliances, network systems, and memory, system LSI, foundry and LED solutions. For the latest news, please visit the Samsung Newsroom at news.samsung.com.

 

About expressuser

Read All Posts By expressuser