
2022–இல் ஓயோ நிறுவனம் அதன் ஓய்வு விடுதிகள் சேவைக்காக 1000ற்கும் மேலான தங்குமிடங்களை சேர்க்கவுள்ளது!
- ஓய்விற்காக பயணம் மேற்கொள்வது அதிகரித்து வரும் சூழலில், ஓயோ(OYO) நிறுவனம் 19+ சுற்றுலா தலங்களில் உள்ள அதன்தங்குமிடங்களின் எண்ணிகையை விரிவாக்கவுள்ளது
- கோவா, பூரி, பாண்டிச்சேரி, சிம்லா, அமிர்தசரஸ், திருப்பதி, காங்டாக் போன்ற அனைத்து முக்கிய இடங்களிலும் கவனம் செலுத்தவுள்ளது
- உள்ளூர் சுற்றுலா தலங்கள்,மக்கள்கூடும் இடங்கள்&பெரிதும் விரும்பப்படும் இடங்களுக்கு அருகாமையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் கவனம் செலுத்தவுள்ளது
- 4ByOYO, 5ByOYO, OYO டவுன்ஹவுஸ், டவுன்ஹவுஸ் OAK, கேபிடல் O மற்றும் கலெக்ஷன் O ஆகியவை ஓயோவின்முன்னணிஓய்வுவிடுதி பிராண்டுகளில் குறிப்பிடத்தக்கவையாகும்
உலகளாவிய விருந்தோம்பல் தொழில்நுட்பத்தில்பெரியநிறுவனமானஓயோ (OYO),முக்கிய சுற்றுலா மையங்களில் அதன் ஓய்வு விடுதிகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறையில் துவங்கி, கடந்த சில மாதங்களாக புத்துணர்வுக்காக பயணம் மேற்கொள்வதுபெரிதும் அதிகரித்துள்ளது. இந்த வகை சுற்றுலாவை இலக்காகக் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் 1000-ற்கும் அதிகமான ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை (ஸ்டோர்ஃபிரன்ட்) சேர்க்கவுள்ளது. செப்டம்பர் 2022-க்குள் இது போன்ற 600-க்கும் மேற்பட்ட ஸ்டோர்ஃபிரன்ட்களை ஏற்கனவே அதன் பிளாட்ஃபார்மில் ஓயோ சேர்த்துள்ளது; வரவிருக்கும் பரபரப்பு மிகுந்த சுற்றுலா சீசன்பண்டிகைகளுடன் தொடங்கி குளிர்கால விடுமுறையோடு தொடரவிருப்பதால்,தற்போதைய காலெண்டர் ஆண்டின் முடிவிற்குள் 400-க்கும் மேற்பட்ட ஸ்டோர்ஃபிரன்ட்களைசேர்க்க ஓயோதிட்டமிட்டுள்ளது.
4ByOYO, 5ByOYO, OYO டவுன்ஹவுஸ், டவுன்ஹவுஸ் OAK, கேபிடல் O மற்றும் கலெக்ஷன் O ஆகியவை ஓயோவின்முன்னணிஓய்வுவிடுதி பிராண்டுகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
5ByOYO
விருந்தோம்பல் தொழில்நுட்பத்துறையில் பெரிய நிறுவனமான ஓயோ, இந்தியா முழுவதும் உள்ளசுமார் 19 முக்கிய மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில்அதன் ஓய்வுவிடுதிகளின் எண்ணிக்கையைவிரிவுபடுத்தும்இலக்கினைக் கொண்டுள்ளது. அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையால் தேவைகள் உயர்ந்துள்ளது; எனவேசிம்லா, அமிர்தசரஸ், உதய்பூர், கோவா, மைசூர், திருப்பதி, பூரி, காங்டாக் போன்ற முக்கிய இடங்களில் ஓயோகவனம் செலுத்திவருகிறது. ஓயோநிறுவனம்தனது போர்ட்ஃபோலியோவில் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளைச் சேர்க்கையில் முக்கியமான உள்ளூர் சுற்றுலா பகுதிகள்மற்றும் மக்கள் கூடும் பிரபலஇடங்களுக்கு அருகாமையில் இருப்பது போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறது. குடும்பமாக சுற்றுலா வருவோர், நண்பர்கள், யாத்திரை குழுக்கள் மற்றும் சொந்தமாக சமையல் ஏற்பாடுகளுடன் பயணிக்கும் குறிப்பிட்ட உணவு விருப்பங்களைக் கொண்ட – கிச்சன் சுற்றுலா பிரிவினர் என பல வகையான பயணிகளின் மீதுஓயோகவனம்செலுத்தி செயல்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றால்ஏற்பட்ட இரண்டு வருட இடையூறுகளுக்குப் பிறகு, இந்தியாவில் பயணங்கள் மீண்டும் வழக்கத்திற்கு திரும்பியுள்ளன. ஜனவரி 2022 – செப்டம்பர் 2022காலஇடைவெளியின் முன்பதிவு தரவுகளைஓயோ நிறுவனம் ஆய்வு செய்தது.இந்தஆண்டுஜனவரி-செப்டம்பர்காலகட்டத்தைகடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், ஓய்வு சுற்றுலாவில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இந்தியா முழுவதும் உள்நாட்டு சுற்றுலாவுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம்அளிக்கப்பட்டு வருவதேஇந்தவளர்ச்சிக்குக்காரணமாகும்; குறிப்பாகநுகர்வோருக்குநம்பிக்கைஅதிகரித்துள்ளதும், பயணத்திற்கானதேவைசரசரவெனஉயர்ந்துள்ளதும்உள்நாட்டுசுற்றுலாவிற்கு உத்வேகம் தந்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில், 2021-ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது 2022-ஜூன் மாதத்தில்சுற்றுலாவின்தேவை அதிகமாகியுள்ளது. கடந்த ஆண்டுஜூனில்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு மாநிலங்கள் மீண்டும் தங்கள் எல்லைகளைத் திறக்கத் துவங்கின, ஆனால் பயணம் செய்வதற்கு மக்களிடையே நம்பிக்கை குறைவாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், இந்த மாதத்தில், தீபாவளி சீசன் என்பதால் இந்தியாவில், பெருந்தொற்றுக்கு முந்தைய சூழல்களில் இருந்த உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்டுகளுக்கான தேடல்களின் அளவு 124 சதவீதமாகவும், சர்வதேச விமானப் பயணத்திற்கான தேடல்கள் 133 சதவீதமாகவும்அதிகரித்துள்ளது; இதனால்விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஓய்வுக்கான சுற்றுலா நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை, ஓயோவுடன்இணைத்து பார்ட்னராக பதிவுசெய்ய விரும்பினால்,விரைவாகவும் திறம்படவும்ஓயோதளத்தில்சேர அதன்’OYO 360′ உதவுகிறது – இது தாமாகவே இணைத்துக்கொள்ள உதவும் ஒருசெல்ஃப்-ஆன்-போர்டிங் வசதி மற்றும் இணையதளமாகும்https://patron.oyorooms.com/in. OYO 360 மூலம் இணைந்த உடனேயே, செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும்கட்டண நிர்ணயம்செய்யும்ஓயோவின்மென்பொருளானது – தங்கும்அறையின் வகை, சுற்றுலாகாலம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் தானாகவே ஓயோவின்செயலி மற்றும் இணையதளத்தில், விடுதிக்கான சிறந்த முன்பதிவு கட்டணங்களை பட்டியலிடுகிறது.அதுமட்டுமில்லாமல், முன்னணி இணையவழி டிராவல் ஏஜென்ட் தளங்களான MMT, Booking.com மற்றும் அகோடா, யாத்ரா போன்றவற்றிலும்விவரங்களை பதிவுசெய்கிறது. இதன் காரணமாக ஸ்டோர்ஃபிரன்ட் கொண்ட தங்குமிடங்கள் ஓயோவில் இணைந்து வருகின்றன; மேலும் அவற்றின் வருவாய் ஓயோ தளத்தில் இணைந்த 12 வாரங்களில் சராசரியாக இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர விருந்தோம்பல் தொழில்நிறுவனங்களுக்கு,ஓயோ அதன்பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களின் மூலம் வருவாயை அதிகரிக்க உதவுகிறது.குறிப்பாக அந்நிறுவனங்களுக்கு CO-OYOஃபிளாக்ஷிப் செயலியின் மூலம் அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்குகிறது. ஓயோ அதன் செயலி மற்றும் இணையதளத்தின்மூலம் அதிக எண்ணிக்கையிலான வழக்கமான வாடிக்கையாளர்களைஅணுகும் வசதியை ஹோட்டல்களுக்கு வழங்குகிறது;மேலும் முன்பதிவிற்கான தேவையை அதிகரிக்கவும்,அதன்மூலம் வருவாயை அதிகரிக்கவும் பல இணையவழி டிராவல் ஏஜென்டுகளின்தளங்களில் (OTAs) ஹோட்டல்களை ஓயோ பட்டியலிடுகிறது.வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாகத் பதிலளிக்க செயற்கை நுண்ணறிவால் இயங்கும்AI சாட்பாட் வசதி,தொடர்வாடிக்கையாளர்களுக்கான லாயல்ட்டி திட்டங்கள் மற்றும் தேவைக்கேற்ப கட்டணத்தை எளிதாகத் திரும்ப அளிக்கும்அம்சம் போன்ற தானியங்கிவசதிகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிப்பதை உறுதிப்படுத்தவதிலும் ஓயோ உதவுகிறது. இந்த காரணிகளின் காரணமாக, ஓயோவின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மீண்டும் அதன்தளத்திற்கு வருகிறார்கள்;80 சதவீதத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் உள்ளூர் ஹோட்டல்களை OYO பிளாட்ஃபார்ம் மூலமாகவே கண்டுபிடிக்கின்றார்கள்.
சமீபத்தில் ஓயோ தென்னிந்தியாவிலும் அதன் விரிவாக்கத் திட்டங்களை அறிவித்திருந்தது. இந்த விருந்தோம்பல் நிறுவனம் தென் பகுதியில்600ஸ்டோர்ஃபிரன்ட்களை சேர்ப்பதன் மூலம் அதன் சேவைத் தளத்தை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் முழுவதும் சுமார் 1,350தங்குமிடங்களை ஓயோ இயக்குகிறது.
இன்று, உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பயணத்திற்கானசெயலியாகஓயோமூன்றாவது இடத்தில் உள்ளது. புதிய ஹோட்டல்கள் ஓயோவின் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைஅதன் செயலி மற்றும் இணையதளம் மூலமாக அணுகுகின்றன; இதுவரை 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளை சேர்ந்தவர்களாவர். ஓயோசமீபத்தில் விருந்தினருக்கு உதவிகரமாக இருக்கும் அம்சங்களான விடுதியில் கட்டணத்தை செலுத்தும் – ‘பே அட் ஹோட்டல்’ வசதிபோன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது.இந்த வசதியின் மூலம் விருந்தினர் விடுதியில்செக்-இன் செய்தவுடன் பணம் செலுத்துவதற்கான சௌகரியத்தை வழங்குகிறது. எளிதாக முன்பதிவினை ரத்துசெய்யும் கொள்கைகள்,மற்றும் செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் சாட்பாட்ஸ் போன்ற தானியங்கி சேவையின் மூலம்வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிப்பது போன்ற வசதிகளையும் ஓயோ அளிக்கிறது.
***



