மாஸ்டர்கார்டின்‘அன்புடன்இலங்கை விளம்பர முன்னெடுப்பானதுபல்வேறு வெகுமதிகள் மற்றும் அனுபவங்களை வழங்கி இந்திய சுற்றுலாப் பயணிகளை அந்நாட்டிற்கு சுற்றுலாசெல்ல ஊக்குவிக்கிறது
மாஸ்டர்கார்டு வைத்திருப்பவர்கள் ஒப்பற்ற சலுகைகள், தள்ளுபடிகள், மற்றும் அனுபவங்களை தங்களதுஇலங்கை பயணங்களின் போது பெற்று மகிழலாம்
சென்னை:இலங்கையில் நிலைமை தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதால், மாஸ்டர்கார்டு‘அன்புடன்இலங்கை என்கிறவிளம்பர முன்னெடுப்பை இன்றுதுவங்கியுள்ளது.இதன்மூலம், இந்த அழகிய தீவு தேசம் வழங்கும் பரந்த அளவிலான மறக்க முடியாத அனுபவங்களைப் பெற இந்திய சுற்றுலாப் பயணிகளைஅங்கு சுற்றுலா செல்ல ஊக்குவிக்கிறது. இந்த விளம்பரப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்திய சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இலங்கையை உருவாக்குவதற்காக ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் போன்ற 50-க்கும் மேற்பட்ட வணிகப் கூட்டாளர்களுடன்மாஸ்டர்கார்டு இணைந்துள்ளது. மாஸ்டர்கார்டின் சிறப்பு வலைதளமான ப்ரைஸ்லெஸ் ஸ்பெஷல்ஸில், இலங்கைசுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள மாஸ்டர் கார்டு வைத்திருப்போர் பல்வேறு ஆதாயங்களை வழங்கும் தொகுப்பு சலுகைகளைப் பெறலாம்.
பல நாடுகள் சுற்றுலா பயணிகளுக்கான தங்கள் பயண விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதால், சுற்றுலா செல்ல உகந்த இடமாகஇலங்கையைக் கருதும் நம்பிக்கை சுற்றுலா பயணிகளின் மத்தியில் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலத்தின் தொடக்கம், மேம்பட்ட சமூகப் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சாதகமான நாணய பரிமாற்று விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்த்தால் – இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகள், சூரிய ஒளியில் நனையும் கடற்கரைகள், வனவிலங்குகள், சாகச விளையாட்டுகள், தனித்துவமான உணவுகள் மற்றும் உலகின் தொன்மையான நகரங்கள் சிலவற்றிற்கு ஆன்மீக யாத்திரை செல்லுதல் என பல காரணங்களுக்காகஇந்தியப் பயணிகளுக்கு இந்நாடு சரியான விடுமுறை சுற்றுலாத் தலமாகமாறியுள்ளது.
இலங்கையின் மாண்புமிகு. சுற்றுலாத்துறை அமைச்சர், திரு.ஹரின் பெர்னாண்டோ, அவர்கள் கூறுகையில்,“தனித்துவமான அனுபவங்கள், கலாச்சார ஒற்றுமை, அருகாமை மற்றும் ஏற்புடைய விலைவாசி ஆகியவற்றின் சரியானகலவையாக இருப்பதால், இந்தியப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான சர்வதேச சுற்றுலாத் தலமாக இலங்கை உள்ளது. இதற்கு மேல், மாஸ்டர்கார்டின் ‘ஸ்ரீ லங்கா வித் லவ்’ விளம்பர முன்னெடுப்பானது, இந்திய சுற்றுலாப் பயணிகள் அவர்களது பயணத்தின் போது மேற்கொள்ளும் செலவுகளுக்கு ஈடாக மேலும் அதிக மதிப்புள்ள ஆதாயங்களை வழங்கவுள்ளது. பாதுகாப்பானமற்றும்கட்டுப்படியாகக் கூடியசுற்றுலாத்தலமாக இலங்கையின் மீதுள்ளநம்பகத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு இந்த கூட்டணிபெரிதளவில் நீண்ட காலத்திற்குஉதவுமென நாங்கள் நம்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
மாஸ்டர்கார்டு நிறுவனத்தின், தெற்கு ஆசிய, தலைமை ஆப்பரேட்டிங் அலுவலர், திரு. விகாஸ் வர்மா அவர்கள் கூறியதாவது, “இலங்கை வழங்கும் அசல் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அனுபவங்கள் இத்தீவு நாட்டை மிகவும் விரும்பத்தக்க விடுமுறை சுற்றுலா தலங்களுள் ஒன்றாக உருவாக்கியுள்ளன. 2022, ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இலங்கைக்கு சுற்றுலாவந்த அனைத்து சர்வதேச பயணிகளில் 16 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியப் பயணிகளாகஉள்ளனர். மேலும், இலங்கையில் சமூகப் பொருளாதார நிலைமைகள் மேம்பட்டுவருவதால், மாஸ்டர்கார்டு நிறுவனம்இந்தியாவில் உள்ள மாஸ்டர்கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு அர்த்தமுள்ள வெகுமதிகள் மற்றும் அனுபவங்களை வழங்கும் சலுகைகளை அளித்து, அவர்கள் மீண்டும் இலங்கைக்கு பயணிக்க, அல்லது முதல் தடவை சுற்றுலா செல்லவும் ஊக்குவிக்கிறது.”
2018-ஆம் ஆண்டு முதல், மாஸ்டர்கார்டு நிறுவனம் இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பானSLTPB-யுடன்இணைந்துசெயல்பட்டு வருகிறது;இலங்கையின்முக்கிய வருவாய் ஆதாரசந்தைகளில் அந்நாட்டை ஒரு விருப்பமான சுற்றுலா தலமாகமேம்படுத்த கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘ப்ரைஸ்லெஸ் சிட்டிஸ்’ என்பதுமாஸ்டர்கார்டு அட்டைதாரர்களுக்கு பிரத்தியேக அனுபவங்களை வழங்கும் சுற்றுலாதலங்களின் கவனமாகத் தொகுக்கப்பட்ட பட்டியலாகும். மரியாதைக்குரியதாக கருதப்படும் இந்தவிலைமதிப்பில்லா நகரங்களுக்கான பட்டியலில், ஜனவரி 2020-இல் தெற்காசியாவிலேயே முதல் இடமாக இலங்கை சேர்ந்தது.கோவிட்-19-க்குப் பிந்தைய இலங்கையின் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சியை ஆதரிப்பதற்காக மாஸ்டர்கார்டின் சுற்றுலா நுண்ணறிவு தளம் மற்றும் ஆலோசனைச் சேவைகளை எவ்வித கட்டணமும் இன்றி அந்நாட்டு அரசாங்கத்திற்கு வழங்க 2020 டிசம்பரில், மாஸ்டர்கார்டு, SLTPB அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டதும்குறிப்பிடத்தக்கது.

