- சினிமா

நானா பட்டேகர் மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல்!

நானா பட்டேகர் மறைவுக்கு,
டி.ராஜேந்தர் இரங்கல்!

நடிப்பாற்றல் கொண்டவர். துடிப்பாற்றலால் நின்றவர். இந்திய திரை உலகத்திலேயே தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். மாறுபட்ட முத்திரையை பதித்தவர். நடிகர் நானா பட்டேகர். அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. ஆம், நடிப்பிலே என் வழி தனிவழி. நடிப்பிலே தனிவழி படைப்பவன் நானா, தன்னம்பிக்கை கொண்டவன் நானா, தளராத முயற்சி செய்தவன் நானா, தடைகளை உடைத்து எறிந்தவன் நானா.
நானா, நானா என்று தன் கேள்வி கணைகளால் தோல்விகளை கூட துடைத்தெறிந்த துணிச்சல் கார நடிகர் தான் நானா பட்டேகர். அவரை இழந்தது இந்திய திரை உலகத்துக்கே ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடக்கூடிய கலை உலகத்தாருக்கும், அவருடைய இல்லத்தாருக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…

இப்படிக்கு,
தமிழ் திரைப்பட நடிகர்,
இயக்குனர்,
திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகசர்,
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்

_GovindarajPro

About Raja Senthilnathan

Read All Posts By Raja Senthilnathan