நமது ஒரேயொரு பூமியைப் பாதுகாக்க இந்த உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் கைகோர்க்கும நிக்கலோடியோன்!
~ உங்களது கார்பன் உமிழ்வைக் குறைத்து நிக்டூன்ஸ் உடன் சேர்ந்து உங்கள் பூமி கிரகத்தைப் பாதுகாத்திடுங்கள் ~

சென்னை: இன்னும் பசுமையான எதிர்காலத்தை எதிர்நோக்க சின்னஞ்சிறு குழந்தைகளை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக, குழந்தைகளது பொழுதுபோக்குத் தளத்தில் முதன்மை வகிக்கும் நிக்கிலோடியோன் ஒரு முக்கிய பரப்புரை திட்டத்திற்காக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சங்கத்தோடு இணைந்து செயல்படுகிறது. 2022 உலக சுற்றுச்சூழல் தினம் என்ற சிறப்பான தருணத்தில் இந்த கூட்டுமுயற்சி ஆரம்பமாகிறது.
இந்த பூமியில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒவ்வொருவரும் அதிக நிலைப்புத்தன்மையுள்ள பூமியை உருவாக்க உதவமுடியும். உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடி நிலையிலிருந்து நமது அன்னை பூமியை பாதுகாக்கும் நோக்கத்தோடு குழந்தைகள் பொழுதுபோக்குத் தளத்தில் முதன்மை வகிக்கும் நிக்டூன்ஸ், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வலிகள் மீது விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் தாயகம் என்று நாம் அழைக்கின்ற நாம் வசிக்கும் ஒரே கிரகமான பூமியை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் இணைந்து செயல்படும். தனிநபர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளின் வழியாக இயற்கையுடனான சமநிலையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான அவசியத்தை முன்னிலைப்படுத்துவதும் மற்றும் நமது கார்பன் உமிழ்வை குறைக்குமாறு செய்வதுமே இந்த பரப்புரை திட்டத்தின் நோக்கமாகும். இந்த விளம்பர பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக “இந்த கிரகம் எங்களது வீடு” (‘Yeh Planet Hum Sabka Ghar Hai’) என்பதை வலியுறுத்தும் ஒருங்கிணைந்து கூட்டாக பருவநிலை நடவடிக்கை எடுப்பதன் அடிப்படை செய்தியினை நிக்கலோடியோன் வழங்கும். நிக்டூன்களை கண்டு ரசிப்பது அனைத்து குழந்தைகளின் தினசரி வழக்கங்களில் ஒன்றாகவும், அவர்களது வாழ்க்கையில் ஒருங்கிணைந்த அம்சமாகவும் இந்தியாவில் ஐ.நா. சங்கத்தின் ஆதரவுடன் ஏற்கனவே இயங்கி வரும் பள்ளி வலையமைப்பை நிக்டூன்ஸ் உதவியுடன் நிக்கலோடியோன் திறம்பட பயன்படுத்திக் கொள்ளும். ‘இப்போதே செயல்படுங்கள்’ (‘Act Now’) என்ற செயல்திட்டத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகளிலும் விளம்பரப்படுத்துவதே இதன் நோக்கம்.
உத்வேகமளிக்கும் இரு கதைகளின் வழியாக “இந்த கிரகம் எங்களது வீடு” என்ற செய்தியினை நிக்கலோடியோன் – ன் நிக்டூன்ஸ் உயிரோட்டமுள்ளதாக வழங்கும். ‘பேப்பர் வீடு’ (‘Kaagaz Ka Ghar’) என்ற தலைப்புள்ள முதல் கதை, மனிதர்களுக்கும், காட்டில் வசிக்கும் வனஉயிரினங்களுக்கும் இடையிலான மோதல் மீது மக்களது கவனத்தை ஈர்க்கும். ‘தண்ணீர் வீடு” (‘Paani Ka Ghar’) என்ற தலைப்புள்ள இரண்டாவது கதை, கடல் உட்பட நீர்நிலைகளில் சேர்ந்திருக்கும் பிளாஸ்டிக் மாசு பற்றி எடுத்துரைக்கிறது. ‘இந்த கிரகம் எங்களது வீடு’ என்ற செய்தியைக் கொண்ட இந்த இரு கதைகளும் பருவநிலையைப் பாதுகாக்கும் ஹீரோக்களாக ஆவதற்கு குழந்தைகள் எடுக்கும் முயற்சிகளையும் மற்றும் பருவநிலை மீது நடவடிக்கைக்கான முக்கியப் பாடங்களை வயது வந்த நபர்களுக்கு கற்பிப்பதன் மூலம் நேர்மறை மாற்றத்தை அவர்கள் கொண்டு வருவதையும் நேர்த்தியாக காட்டுகிறது.
இந்த ஒத்துழைப்பு குறித்து வயாகாம் 18 – ன் இந்தி பொது பொழுதுபோக்கு மற்றும் சிறார்களுக்கான டிவி நெட்வொர்க் – ன் தலைவர் நினா எலாவியா ஜெய்பூரியா இதுகுறித்து கூறியதாவது: “புதுமையான முயற்சிகளின் வழியாக அதிக அர்த்தமுள்ள வழிமுறைகளில் குழந்தைகள் திறனதிகாரம் பெறுவது மீது நிக்கலோடியோன் எப்போதும் கவனம் செலுத்தி வந்திருக்கிறது. திறன்மிக்க இந்த இளையோர்கள் தான் சமூகத்தின் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் என்ற வலுவான நம்பிக்கை கொண்டிருக்கும் நாங்கள், பசுமையான எதிர்கால முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்துகொள்வது இன்றியமையாதது என்று நாங்கள் கருதினோம். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று ஐக்கிய நாடுகள் சங்கத்தோடு கைகோர்த்து செயல்படுவதில் நாங்கள் மிகவும் பெருமை கெளர்கிறோம். எங்களது பிரான்சைஸ் – ன் ஆற்றல் மற்றும் அனைவரின் அன்புக்குரிய நிக்டூன்ஸ் மூலம் #ஒரேயொரு பூமி என்ற செய்தியினை சாத்தியமுள்ளவரை ஏராளமான குழந்தைகளுக்கும் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் நாங்கள் வலுவாக கொண்டுபோய் சேர்ப்போம்.”
இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஷோம்பி ஷார்ப் பேசுகையில், “இந்த உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு நிக்கிலோடியோன் உடன் ஒரு கூட்டாண்மை செயல்பாட்டைத் தொடங்க இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சங்கம், அதிக உற்சாகத்துடன் இருக்கிறது. வளரும் பருவத்தின் தொடக்க நிலையிலேயே பருவநிலை சேம்பியன்களாக ஆவதற்கு குழந்தைகளை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களை திறனதிகாரம் பெறச்செய்யும் முயற்சியாக இது இருக்கிறது. நேர்மறையான மாற்றத்திற்கு இந்த வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான இளைய தலைமுறையினர் மீது தாக்கம் ஏற்படுத்தும் சக்தியை பொழுதுபோக்கு தொழில்துறை கொண்டிருக்கிறது. இந்த கூட்டாண்மையின் வழியாக, பருவநிலைக்கான நடவடிக்கையை முன்னெடுப்பவர்களாகவும் மற்றும் இந்த பூமி கிரகம் எதிர்கொள்கின்ற நெருக்கடி நிலைகளை சமாளிப்பவர்களாகவும் ஆவதற்கு படைப்பாக்கத் திறனுள்ள சிறார்களுக்கு ஒரு தளத்தை வழங்க இயலும் என்று நாங்கள் நம்புகிறோம். குழந்தைகள் முன்னின்று வழிநடத்தும்போது அவர்களது குடும்பங்களும், சமூகங்களும் அவர்களை பின்தொடரும்; இந்தியா வழிநடத்தும்போது இந்த உலகமும் அதன் பாதச் சுவடுகளைப் பின்பற்றி நடைபோடும்,” என்று கூறினார்.
இந்த முனைப்புத் திட்டத்தை பரவலாகக் கொண்டுபோய் சேர்ப்பதற்காக மும்பை மற்றும் டெல்லியிலுள்ள மால்களில் நுகர்வோர்கள் பங்கேற்கும் ஒரு நடவடிக்கையை தொடங்குவதன் மூலம் ஒரு புதுமையான பரப்புரை திட்டத்தை நிக்கிலோடியோன் செயல்படுத்துகிறது. நாம் வாழும் கிரகமான பூமியை இன்னும் பசுமையானதாக ஆக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்தும். இதற்கும் கூடுதலாக, பசுமை இதய உறுதிமொழியை ஏற்கவும் மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சனைக்குத் தீர்வுகாண வெவ்வேறு வழிமுறைளைப் பின்பற்றவும் குழந்தைகளுக்கு உத்வேகமளிக்க சமூக ஊடகத்தில் ஒரு ஈடுபாட்டு திட்டத்தையும் இப்பரப்புரை திட்டம் உருவாக்கும். இன்டராக்டிவ் தாக்கம் ஏற்படும் சந்தையாக்கல் முறை, சமூக மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் வழியாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பசுமை இதய உறுதிமொழியை ஏற்பதன் மூலம் இனிவரும் தலைமுறைகளுக்காக எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நிக்கலோடியோன் மற்றும் இந்தியாவின் ஐக்கிய நாடுகள் சங்கத்துடன் இணைந்திடுங்கள்!




