- சினிமா செய்திகள், பொது

சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்!

சொந்த வீடு வாங்க குடும்பத்துடன் போராடும் நடிகர் விமல்!

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் T.R. ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து எஸ் ஜே சூர்யா யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்” படத்தை தயாரித்துள்ளனர்.
படம் இம்மாதம் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
இதை தொடர்ந்து விமல் நாயகனாக நடிக்கும் மஞ்சள் குடை படத்தையும் தயாரித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர் படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார்.
இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், ரேணுகா ராதாரவி ,Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
இசை – ஹரி
வசனம் – கிஸ்ஸார்
எடிட்டிங் – ராஜாமுகமது
ஸ்டன்ட் – ஹரி தினேஷ்
கலை – மாதவன்
இணை இயக்கம் – மாரி செல்வம்.
மக்கள் தொடர்பு- மணவை புவன்
தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகீர் உசேன்.
கதை, திரைக்கதை, இயக்கம் – சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன், ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குனர் சிவம் ராஜாமணி கூறியதாவது….

ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது.
இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகை தான். அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள் புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம்.
இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது என்கிறார் இயக்குனர் சிவம் ராஜாமணி.

About expressuser

Read All Posts By expressuser