- பொது

சோனி பிபிசி எர்த் அலைவரிசையுடன் ஒரு சாகசப் பயணத்திற்கு தயாராகுங்கள்!

வரும் ஜுலை மாதத்தில் சோனி பிபிசி எர்த் அலைவரிசையுடன்
ஒரு சாகசப் பயணத்திற்கு தயாராகுங்கள்

  சென்னை: வியப்பில் ஆழ்த்தும் அற்புதமான ஒளிப்பதிவு, மனதை ஒன்றவைக்கும் கதை சொல்லல் முறை ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற சோனி பிபிசி எர்த், நம்பிக்கையையும், நேர்மறை உணர்வையும் மனதில் பதிய வைக்கின்ற மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற நிகழ்ச்சிகளின் மூலம் பார்வையாளர்களை தொடர்ந்து பரவசப்படுத்தி வருகிறது.  இயற்கை மற்றும் வனஉயிர்கள், அறிவியல், சாகசம் மற்றும் ஆராய்ச்சி, பொறியியல் மற்றும் உற்பத்தி மற்றும் மீன்பிடிப்பு என பல்வேறு வகையினங்களை உள்ளடக்கி, மாறுபட்ட பிரிவுகளில் சிறப்பான நிகழ்ச்சிகளை இந்த சேனல் வழங்குகிறது.  2022 ஜுலை மாதத்தில் “சீனா: இயற்கையின் புராதன பேரரசு” (‘China: Nature’s Ancient Kingdom’) மற்றும்இது எங்கிருந்து வருகிறது” (Where It Comes From) என்ற புத்தம் புதிய தொடர்களின் ஒளிபரப்பை முதன்முறையாகத் தொடங்குவதன் மூலம் தனது சிறப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பை இந்த பிராண்டு மேலும் வலுப்படுத்த முனைகிறது.

About expressuser

Read All Posts By expressuser